தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவிலிருந்து நீக்கப்பட்ட சிலர் : வெளியான தகவல்
தமிழரசுக் கட்சியின் (ITAK) மத்திய குழுவிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு உரிய கடிதங்கள் கிடைக்கவில்லை என கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் இருந்து சிலர் நீக்கப்பட்டதாகவும் சிலரிடம் விளக்கம் கோரப்படவுள்ளதாகவும் கட்சியின் ஊடகப் பேச்சாளரால் அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இதுவரை கட்சியிலிருந்து எவ்வித கடிதங்களும் கிடைக்கப்பெறவில்லை என தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
சிறீதரன் எம்.பியை பற்றி வாய்திறக்க கஷ்டப்படும் கஜேந்திரகுமார்... சம்பந்தன் ஏற்றதையும் சுமந்திரன் குழப்பியதாக புது தகவல்
மத்திய குழுக் கூட்டம்
இது குறித்து மேலும் தெரியவருகையில், எதிர்வரும் 18ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் திருகோணமலையில் (Trincomalee) இடம்பெற உள்ளது.
மத்தியகுழுவில் இருந்து இடைநிறுத்தப்பட்டவர்கள் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுவதற்கு முன்பாக கோரப்படும் விளக்க கடிதங்கள் இதுவரை அனுப்பப்படவோ சம்பந்தப்பட்டவர்களுக்கு கடிதம் கிடைக்கவோ இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வேறு கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் ஊடாக போட்டியிட்டவர்கள் மற்றும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறப்படும் பலரும் இம்முறை தமிழரசுக்கட்சியினுடைய மத்தியகுழு கூட்டத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
சம்பந்தப்பட்டவர்களுக்குரிய கடிதம்
இந்த நிலையில் குறித்த கடிதங்கள் கட்சியின் செயலாளரினால் இதுவரை அனுப்பப்படவில்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில் இது குறித்து செயலாளர் ப. சத்தியலிங்கம் (P. Sathiyalingam) தெரிவித்துள்ளதாவது,
“மாவட்ட கிளைகளுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன் சம்பந்தப்பட்ட சிலருக்கும் கடிதம் அனுப்பி வைத்துள்ளோம்.
அத்துடன் மாவட்ட கிளைகள் கட்சியின் கட்டுப்பாட்டை மாறியவர்கள் தொடர்பான விபரங்களை அனுப்பிய பின்னரே நாம் கட்சியினூடக உத்தியோகபூர்வ கடிதங்களை அனுப்புவோம். அதற்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.
அத்துடன் மாவட்ட கிளைகளில் இருந்து தரப்பட்ட விபரத்தின் அடிப்படையில் சிலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |