மிரிஸ்ஸவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் படுகாயம்
Matara
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
மாத்தறை - மிரிஸ்ஸவில் இன்று (31) துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் 34 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்களால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலதிக விசாரணை
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் ரிவோல்வர் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
மேலும், துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இன்னும் வெளியாகாத நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்