அமெரிக்காவில் துப்பாக்கிசூடு : ஒருவர் பலி பலர் காயம்
United States of America
New York
Gun Shooting
By Sumithiran
அமெரிக்காவின் (usa) நியுயோர்க், ரோசெஸ்டர் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 06 பேர் காயமடைந்துள்ளனர்.
நியுயோர்க்கில் உள்ள ரோசெஸ்டரில் உள்ள மேப்பிள்வுட் பூங்காவில் துப்பாக்கிச்சூடு நடந்தது.
காயமடைந்தவர் கவலைக்கிடம்
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் 20 வயதுடையவர் எனவும், காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்