வவுனியா வடக்கில் துப்பாக்கிச் சூடு - 5 பிள்ளைகளின் தந்தை பலி
Vavuniya
Sri Lanka Police Investigation
By Vanan
வவுனியா வடக்கில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி காவல்துறையினர் தெரிவித்தனர்.
இன்று (21) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது இடியன் துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
5 பிள்ளைகளின் தந்தை

இதில், அப்பகுதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான அழகையா மகேஸ்வரன் (வயது 58) என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெத்துள்ளனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி