துப்பாக்கிசூட்டில் ஒருவர் பலி
Sri Lanka Police
Colombo
Shooting
Sri Lanka
By Sumithiran
இனந்தெரியாதவர்கள் துப்பாக்கிசூடு
அம்பலாங்கொட பிரதேசத்தில் இன்று துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அம்பலாங்கொட, உரவத்த பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவில்லை என்பதுடன், அம்பலாங்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக தென்பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்படும் துப்பாக்கி சூட்டில் உயிரிழப்புகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
