சஜித் தரப்பைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை
Kegalle
Sri Lanka Police Investigation
Samagi Jana Balawegaya
By Vanan
கேகாலையில் துப்பாக்கிப் பிரயோகம்
கேகாலை – களுகல மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று (01) முற்பகல் இந்தத் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகத்தில் கேகாலை – ஹம்புதுகல பகுதியைச் சேர்ந்த 36 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தின் ஊழியர்
இவ்வாறு உயிரிழந்த பெண், களுகல்ல மாவத்தையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தின் ஊழியர் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

