பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு! டெல்லியை அதிர வைத்த சம்பவம்
இந்தியாவின் டெல்லி நீதிமன்ற வளாகத்தில் சுமார் 40 நிமிடம் நடைபெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் பிரபல தாதா ஜிதேந்தர் கோகி உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல தாதா ஜிதேந்தர் கோகி கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படடிருந்தார்.
விசாரணைக்காக ஜிதேந்தர் கோகி உள்ளிட்டோர் இன்று டெல்லி ரோகிணி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுவதற்காக அழைந்துவரப்பட்டனர்.
அறை எண் 207இல் அவர்கள் சென்றபோது அவர்களை நோக்கி வழக்கறிஞர்கள் உடையில் இருந்த ஜிதேந்தர் கோகியின் எதிர்கோஷ்டியினர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
பாதுகாப்புக்காக வந்து இருந்த இந்திய காவல்துறையினர் எதிர்கோஷ்டியை நோக்கி சுட்டனர்.
இதனால் அங்கு சுமார்40 நிமிடம் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் ஜிதேந்தர் கோகி உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
மேலும் துப்பாக்சிச் சூடு நடைபெற்ற இடத்தில் அதிகளவான இந்தியா காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.