மலினப்படுத்தப்படும் தமிழர்களின் போராட்டம்: கிழித்து தொங்கவிட்ட இளைஞர்
வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்கள் மற்றும் அதிகரித்த இராணுவ பிரசன்னம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக இன்றைய தினம் (18) வடக்கு - கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) அழைப்பு விடுத்திருந்தார்.
குறித்த அறிவிப்பு தமிழரசுக் கட்சியின் சார்பில் வெளியான அறிப்பு என கருதப்படாது தனிப்பட்ட ரீதியில் தனி நபராக சுமந்திரனின் அறிப்பாக மட்டுமே கருத்தப்படுவதாக தெரிவித்து தமிழர் தரப்பில் பாரிய எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ளும் நேரத்தை மட்டுப்படுத்தி தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரன் நேற்றைய தினம் (17) ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
இந்தநிலையில், இன்றைய தினம் (18) தமிழர் பிரதேசங்களில் கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போதும் தனிப்பட்ட நபரின் அறிவிப்புக்காக நாங்கள் கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுக்க முடியாது என்ற ரீதியில் சில இடங்களில் எதிர்ப்பு கிளம்பி இருந்தது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுமந்திரனும் திட்டமிட்ட ரீதியில் சிலரர் மூடப்பட்ட கடைகளை திறந்து வைத்திருப்பதாக வவுனியாவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது சுட்டிக்காட்டியிருந்தார்.
இவ்வாறான பின்னிணியில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இளைஞர் ஒருவர், சுமந்திரனின் இந்த போராட்ட அறிவிப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பில் தெரிவித்த அவர், குறித்த கடையடைப்பு போராட்டம் பெருமளவில் புறக்கணிக்கப்பட்டமைக்கான காரணம், சுமந்திரன் என்ற தனிநபரும் மற்றும் அழைப்பு விடுத்த கட்சியும்தான் என அவர் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்.
மேலும், கடையடைப்பு போராட்டத்தின் பின்னணி, சுமந்திரனின் அறிவிப்பு நிராகரிக்கப்பட்மைக்கான காரணம், தமிழரசுக் கட்சி மற்றும் பலதரப்பட்ட விடயம் தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது கீழுள்ள காணொளி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா
