110 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு! சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்
Ministry of Health Sri Lanka
By pavan
இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்தவகையில் அத்தியாவசியமான 110 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றதாக சுகாதார அமைச்சின் சர்வதேச ஔடதங்கள் குறித்த பிரதான தொடர்பாளரும் மருத்துவருமான அன்வர் ஹம்தானி சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, பல்வேறு திட்டங்கள் தற்போது கையிருப்பில் இருக்கின்ற மருந்துகளை வைத்து நோயாளர்களை பராமரிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எடுக்கப்படவுள்ள முன்னேற்பாடுகள்
மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் விரைவில் நிவர்த்தி செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி