இலங்கையில் அதிகரித்து வரும் தடுப்பூசி தட்டுப்பாடு
மனித பாப்பிலோமா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை இருப்பதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த எட்டு மாதங்களாக அந்த தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அதன் தலைவர் நிபுணர் டொக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக கடந்த வருடம் முதல் தடுப்பூசி போடும் பணி முடங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தடுப்பூசி
இது தொடர்பில் பாலித மஹிபால மேலும் தெரிவிக்கையில், பல மாதங்களாக இது தொடர்பான தடுப்பூசிகளுக்கு உலகளாவிய தட்டுப்பாடு நிலவி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், முன்பதிவு செய்யப்பட்ட தடுப்பூசிகள் எதிர்வரும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இலங்கையில் பெற்றுக்கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒன்றரை வருட காலத்திற்கு தேவையான தடுப்பூசிகள் இவ்வாறு இறக்குமதி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |