இலங்கையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு: விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இருதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் நோயாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ (Thushara Ranadeva) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பாக சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் ஜி. விஜேசூரிய (G. Wijesuriya) தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
மருந்துகளுக்கு தட்டுப்பாடு
இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளில் இதுவரையில் 20 வீதமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், அதற்கு மாற்று மருத்துகள் தற்போது நாட்டில் உள்ளதாகவும் இதனால் மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |