மருந்துப்பொருட்களின் நெருக்கடியை ஆராய தொழில்நுட்ப குழு நியமனம்!
Sri Lanka
By pavan
நாட்டில் தற்போது நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய்ந்து அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக தொழில்நுட்ப குழுவொன்றை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நியமித்துள்ளது.
இந்த விடயத்தை அரச வைத்திய ஊடக பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
மருந்துகளின் தட்டுப்பாடுகள் மற்றும் மருந்துகளின் விலை அதிகரிப்பு போன்றவற்றால் நாட்டில் நிலவுகின்ற நெருக்கடிகளில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்காதது ஒட்டுமொத்த சுகாதார அமைப்புக்கும் சவாலாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நியமிக்கப்பட்ட குழு
இந்நிலையில் நெருக்கடிகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள தொழிநுட்ப குழு இது தொடர்பான அறிக்கையை இந்த வார இறுதிக்குள் கையளிக்கும் எனவும் சமில் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி