சந்தையில் சீனி - கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு
சந்தையில் தற்போது சீனி மற்றும் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
சீனிக்கு வரி விதிக்கப்பட்டதன் மூலம் சந்தையில் சீனியின் விலை அதிகரித்ததையடுத்து, அரசாங்கம் சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை விதித்தது.
அதேசமயம், நாட்டில் 19,000 மெட்ரிக் டொன் சீனி கையிருப்பில் உள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை கூறியுள்ளது.
ஆகக்கூடிய சில்லறை விலை
இந்நிலையில், இவ்விடயம் தொடர்பாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிக்கையில்,
“நாட்டில் சீனி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.
களஞ்சியசாலைகளில் உள்ள சீனி கையிருப்பில் ஆகக்கூடிய சில்லறை விலையின் கீழ் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.
விசேட கலந்துரையாடல்
மேலும், இவ்விடயம் குறித்து வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ,
“சீனி இறக்குமதியாளர்களுடன் நாளை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
எவ்வாறாயினும், கீரி சம்பா பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்கு வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்யவுள்ளோம்.” என வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |