ஆசிரியர் பற்றாக்குறை ஏன் ஏற்பட்டது : உண்மையை போட்டுடைத்தார் அமைச்சர்
Prasanna Ranatunga
Sri Lankan Schools
Teachers
By Sumithiran
பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்றவர்களினால் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(prasanna ranatunga) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பாரியளவிலான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
வேலையற்ற பட்டதாரிகள்
வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் இன்று (9) நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேல்மாகாணத்திற்கு ஆசிரியர் பரீட்சை மூலம் ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட போதிலும், பாடவாரியாக ஆட்சேர்ப்பு செய்யும் போது சிலர் விடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்