வடக்கு மாகாணத்திலுள்ள கல்விமாணிப் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்
வடக்கு மாகாணத்தைச்(Northern Province) சேர்ந்த கல்விமாணி பட்டதாரிகள் 13 பேருக்கு, ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸால்(P. S. M. Charles) வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது, வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று(8) நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த ஆளுநர், “தாம் கற்றுக்கொண்ட நுட்பங்களை பாடசாலைகளில் பயன்படுத்தி, கற்பித்தல் செயற்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
ஆசிரியர் நியமனம்
அதனூடாக கல்வித் தரத்தை பேணுவதுடன், மாணவர்கள் இலகுவாக கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
மாணவர்கள் பாடசாலைக்கு விரும்பி வருகைதரும் வகையில் வகுப்பறைகள் மாற்றப்பட வேண்டும் எனவும், மாணவர்களின் முன்மாதிரிகளாக ஆசிரியர்கள் திகழ வேண்டும் ” என தெரிவித்தார்.
மேலும், வடக்கிலுள்ள ஆரம்ப மற்றும் இடைநிலை பாடசாலைகளுக்கு இன்று நியமனம் வழங்கப்பட்ட புதிய ஆசிரியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் புதிய ஆசிரியர்கள் , தங்களுக்கு நியமனம் வழங்கப்படும் பாடசாலைகளில் கடமைகளை பொறுப்பேற்க வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |