பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளில் உருவாகியுள்ள சிக்கல் நிலை
Sri Lanka
By Pakirathan
பல்கலைக்கழகங்களில் நிலவும் விரிவுரையாளர்களின் பற்றாக்குறையால் பல்கலைக்கழகங்களில் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கூறியுள்ளது.
பற்றாக்குறை
பல்கலைக்கழகங்களின் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக சராசரியாக 11,293 விரிவுரையாளர்கள் தேவைப்படுகின்ற போதிலும், தற்போது 6,677 பேர் மாத்திரமே கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சாருதத்ய இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்