சிகிரியா செல்ல விரும்புவோருக்கு மகிழ்ச்சி தகவல்!
உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள சீகிரியாவை இரவு நேரங்களிலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தொல்பொருள் மதிப்புடைய பல இடங்களை இரவு நேரங்களிலும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்து வைப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
அதன்படி, சீகிரியாவை தற்போது இரவு நேரங்களிலும் பார்வையிட அனுமதித்துள்ளதாக புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் கமகெதர திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாப் பயணிகள்
இதேவேளை, கடந்த 2024 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 2,053,465 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டு(2025) கடந்த வருட சுற்றுலா பயணிகளின் வருகையை விட அதிகமான பயணிகளின் வருகையை எதிர்பார்ப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |