அரிசி இறக்குமதி குறித்து வெளியான தகவல்
நேற்று (10) நள்ளிரவு வரை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மொத்த அரிசியின் அளவு 167,000 மெட்ரிக் தொன்களை விட அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.
அரிசி இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் நேற்று (10) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் 66,000 மெட்ரிக் தொன் பச்சரிசி மற்றும் 101,000 மெட்ரிக் தொன் புழுங்கல் அரிசி ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வர்த்தமானி அறிவித்தல்
அத்துடன், நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 8,000 மெட்ரிக் தொன் அரிசி இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பதாகவும் சுங்கம் (Sri lanka Customs) தெரிவித்துள்ளது.
குறித்த அரிசியை விடுவிப்பதற்கு, அரசாங்கம் அரிசி இறக்குமதி காலத்தை நீடிக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட வேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உள்நாட்டு சந்தையில் நாட்டரிசி மற்றும் பச்சரிசி பற்றாக்குறை ஏற்பட்ட சூழலில், இறக்குமதியாளர்கள் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் சிறப்பு அனுமதியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |