கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியை சந்தித்த தமிழரசு எம்.பிக்கள்
கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சரான ஹரி ஆனந்தசங்கரியை (Gary Anandasangaree) தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கிய குழுவினர் சந்தித்து கலந்துரையாடினர்.
குறித்த சந்திப்பு நேற்றைய தினம் (10) கொழும்பில் (Colombo) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கலந்துரையாடலில் தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் ப. சத்தியலிங்கம் (P. Sathiyalingam), ஞா. சிறிநேசன் (G. Sirinesan), ஸ்ரீநாத் (I.Srinath), ச.குகதாசன் (K. S. Kugathasan) மற்றும் து. ரவிகரன் (T. Raviharan) ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழர்களுடைய எதிர்பார்ப்பு
இந்த சந்திப்பின் போது இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரான தமிழ் மக்களின் நிலை, தற்போதைய ஆட்சியாளர்களின் அரசியல் போக்கு மற்றும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் கனடா அரசாங்கத்திடம் தமிழர்களுடைய எதிர்பார்ப்பு என்பன தொடர்பிலும் ஆழமாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களான இரா.சாணக்கியன் (R.Shanakiyan) சிவஞானம் சிறீதரன் (S. Shritharan), எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) ஆகியோர் இந்தியாவின் - தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        