இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொவிட் -இராஜாங்க அமைச்சர் கடும் எச்சரிக்கை
covid
srilanka
increase
Dr. Sudarshani Fernandopulle
By Sumithiran
கொவிட் அபாயம் அதிகரித்து வருவதாக இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே(Dr. Sudarshani Fernandopulle,) தெரிவித்தார்.
மருத்துவமனைகளில் பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, பரிசோதனைகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையும் அதிகரித்து வருவதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.
இந்த நிலைமையை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும், சுகாதாரச் சட்டங்களுக்கு இணங்குவதில் பொதுமக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனவும் திருமதி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சுமார் 40 சிறுவர்கள் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதன் பணிப்பாளர் டொக்டர் ஜி.விஜேசூரிய(Dr. G. Wijesuriya) தெரிவித்துள்ளார். இது ஒப்பீட்டளவில் அதிகரிப்பு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
