வெளியேறினார் கோட்டாபய - சிறிலங்காவின் தலைவராகிறார் சபாநாயகர் மஹிந்த யாப்பா!
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாட்டை விட்டு கோட்டாபய வெளியேறியுள்ள நிலையில், சிறிலங்காவின் தற்காலிக தலைவராக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன செயற்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் நாட்டின் தற்காலிக தலைவராகவே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனத செயற்படவுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்வது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை அமெரிக்கா சென்றுள்ளார்.
இதேவேளை கடந்த வாரம் இத்தாலியில் ஜி 20 சர்வமத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் இத்தாலி சென்றுள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை அல்லது திங்கட்கிழமை நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அது வரையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாட்டின் தலைவராக செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.