ஈரான் அரசை எதிர்த்த பாடகருக்கு மரண தண்டனை விதிப்பு
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்ட பிரபல ராப் பாடகர் டூமாஜ் சலேஹிக்கு ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
ஈரானிய குர்திஷ் பெண்ணான அமினி என்பவர் இஸ்லாமிய குடியரசின் பெண்களுக்கான கடுமையான ஆடைக் கட்டுப்பாட்டை மீறியதற்காக டெஹ்ரானில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
போராட்டங்கள்
அதனை தொடர்ந்து 22 வயதான குறித்த பெண் 2022 ஆம் ஆண்டு ஒக்டோபரில் காவல்துறையின் காவலில் இருந்த போது உயிரிழந்துள்ளார்.
அதன் பின்னர், சம்பவத்திற்கு எதிராக ஈரான் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
குற்றச்சாட்டு
அப்போது நடந்த கலவரம் தொடர்பாக தூமாஜ் சலேஹி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சலாஹிக்கு எதிரான தண்டனையை தளர்த்த வாய்ப்புகள் காணப்படுவதாக அந்நாட்டு அரச ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |