பாடகர் கே.ஜே.யேசுதாஸ் வைத்தியசாலையில் அனுமதி
பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் (K. J. Yesudas) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தன்னுடைய தனித்துவமான குரல் வளத்தால் உலக அளவில் பிரபலமானவர் இவர் மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி உள்ளார்.
80 மற்றும் 90களில் இவரது குரலில் வெளிவந்த பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டுள்ளது.
உடல்நலக் குறைவு
இந்த நிலையில், வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், அவர் தற்போது நலமோடு இருப்பதாகவும் சிகிச்சை நிறைவடைந்த பின்னர் வீடு திரும்பவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, பாடகர் கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 22 மணி நேரம் முன்
