அமைச்சர்களுக்கு எதிராக அணிதிரளும் சிங்கள மக்கள் (படங்கள்)
குருநாகல், பமுனகொடுவா பிரதேசத்தில் கலாசார நிலையமொன்றை திறப்பதற்குச் சென்ற அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு பிரதேசவாசிகளின் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் ஆகியோருக்கே இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல தடவைகள் திறக்கப்பட்ட கலாசார நிலையம்
எனினும், எதிர்ப்பையும் மீறி அமைச்சர்கள் விழா மண்டபத்திற்குச் சென்று பணிகளை மேற்கொண்டதாக தெரியவருகிறது.
இந்த கலாசார நிலையத்தை பல அமைச்சர்கள் பல தடவைகள் திறந்து வைத்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் கோரிக்கை
அத்துடன், இந்த நிலையம் அமைந்துள்ள மஹாகெலிய கட்டுபொத வீதி சில காலமாக பாழடைந்து காணப்படுவதாகவும், இவ்வாறான போலியான நிகழ்வுகளுக்கு செலவிடப்படும் பணத்தில் வீதியை சீர் செய்ய வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாமதமான அமைச்சரின் வருகை
எனினும் புத்தசாசன கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க வைபவத்திற்கு வர தாமதமானதால் புதிய கட்டடத்தின் பெயர்பலகை உள்ளூர் கலைஞர்கள் குழுவால் திறந்து வைக்கப்பட்டது.


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்