சமூக வலைத்தளங்களில் கலக்கும் சிங்கள பாடகி “யொஹானி” யார் தெரியுமா?
தற்பொது பெரும்பாலனவர்களின் தமிழர் வட்ஸ் அப் மற்றும் முகநூல் பக்கங்களிலும் ஏனைய சமூக வலைத்தளங்களிலும் கடந்த சில வாரங்களாகவே சிங்கள மொழி பாடகியொருவரின் பாடலொன்று மிகப்பிரபலமாக பகிரப்பட்டுவருகின்றது. இந்தப்பாடகியின் பெயர் யொஹானி.
இவரது தந்தை யார் என்று தெரியுமா? இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவினால் விசேடமாக நியமிக்கப்பட்டு இறுதிப்போரில் இராணுவத்தின் 59 ஆவது டிவிஷன் படையணிக்கு தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா ஆவார். அதற்கு முன்னர் கிழக்கில் 55 ஆவது டிவிஷன் படையணிக்கு தலைமை வகுத்து மாவிலாறு பிரதேசத்தின் மீதான நடவடிக்கையை ஒழுங்கமைத்தவர். அத்தோடு வவுனியாவில் இருந்து இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியை ஒருங்கமைத்தவர்களில் முக்கியமானவர் எனவும் கூறப்பட்டுள்ளது.
யொஹானியின் “மெனிக்கே மகே ஹித்தே” முதலில் வெளிவந்தபோது மிகப்பெரியளவில் பிரபலமானது. தற்போது யு டியூபில் சுமார் ஐம்பது மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர்.
வெளிநாட்டில் கணக்கியல் துறையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்யுள்ள பாடகி சிறிது காலம் முகாமையாளராக பணியாற்றியுள்ளார், அத்துடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இசை நிகழ்வுகளிலும் பங்கேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.