வடக்கு கிழக்கில் சிங்கள ஆக்கிரமிப்பு - பேரினவாதிகளின் கருத்துகளுக்கு கஜேந்திரன் பதிலடி
Buddhism
By Vanan
தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் உள்ள தொல்பொருள் சின்னங்களை, சிங்கள மயமாக்கல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூறியுள்ளது.
முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய செவ்வியில் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு கிழக்கிலுள்ள தொல்பொருள் சின்னங்களின் வரலாறு தொடர்பாக தமிழ் தொல்பொருள் நிபுணர்களினதும் சுயாதீன சர்வதேச நிபுணர்களினதும் பங்குபற்றுதலுடன் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
அத்தோடு, எல்லாவெல மேதானந்த தேரர் ஒரு இனவாதி என அவர் காட்டமாக விமர்சித்துள்ளார்.
