காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சிங்கள மக்களே நீதி வழங்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் கோரிக்கை
இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை எனவும் யாரும் படையினரிடம் கையளிக்கப்படவில்லை எனவும் காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகவும் இவர்கள் போன்ற நீதிக்கு அப்பாற்பட்டவர்களை நீக்கிவிட்டு, நீதியான தலைவர்களை நியமிக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நீதியை வழங்குவதற்கு தயாராகுமாறு சிங்கள மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், உண்மையான பௌத்த மதத்தை நேசிக்கின்ற, புத்த பகவானை வணங்குகின்ற நீதியான சிங்களத் தலைவர்கள் இருக்கின்றார்கள்.
சிங்கள அதிகாரிகள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு நியமனம் கொடுங்கள். மனச்சாட்சியின் படி இருக்கும் இவ்வாறானவர்களை நியமித்து இந்த நாட்டை எவ்வாறு கொண்டு செல்வது என்பது பற்றி சிந்தியுங்கள்.
அது தான் நீங்கள் செய்யக்கூடிய மிகப் பெரிய காரியமாக மாறும் என அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
