கெனடியை கொன்றவருக்கு 53 வருடங்களுக்கு பின்னர் கிடைத்தது பிணை
அமெரிக்க முன்னாள் செனட்டர் றொபேட் எப். கென்னடியை கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக இனம் காணப்பட்டு கடந்த 53 வருடங்களாக சிறையில் இருந்த சிர்ஹான் சிர்ஹானுக்கு வெள்ளிக்கிழமை (27.8.2021) பிணை வழங்கப்பட்டது.
1968 ஆம் ஆண்டு கென்னடி கொல்லப்பட்டார். பிணையில் விடுவிக்கப்பட்ட சிர்ஹான் சிர்ஹானுக்கு தற்போது 77 வயதாகும்.அவரை விடுவிப்பதற்கு அரசு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
கென்னடியின் தற்போது இருக்கும் இரண்டு மகன்களான ரொபேர்ட் எப். கென்னடி, மற்றும் டக்ளஸ் கென்னடி ஆகியோர் பிணை வாரியத்தின் முன் ஆஜராகி பிணை வழங்குவதற்கு தங்கள் ஆதரவை வழங்கினர்.
"திரு. சிர்ஹானை நேருக்கு நேர் பார்க்க முடிந்ததில் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். நான் அவருக்கும் அவரது பெயருக்கும் ஒரு வழியில் பயந்து என் வாழ்க்கையை வாழ்ந்தேன் என்று நினைக்கிறேன். மேலும் அவரை ஒருவராகப் பார்த்ததற்கு இன்று நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கருணை மற்றும் அன்புக்கு தகுதியான மனிதர், அவர் என "டக்ளஸ் கென்னடி, தெரிவித்தார்.
இதுவிடயத்தில் பிணை வழங்கும் குழுவின் தோள்களில் பெரும் பொறுப்பு இருந்ததையும் அவர் ஒப்புக்கொண்டார்.
றொபேட் எப். கென்னடி அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன்எப். கென்னடியின் சகோதரன் ஆவார்.