தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி தொடர்ந்து போராட வேண்டும் - சிறீதரன் எம்.பி.
தமிழினப் படுகொலைக்கான நீதியைக் கோரி, எமது அரசியல் இலக்கை அடையும் வரை தொடர்ந்து போராட வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்றக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.
கரைச்சி (Karachchi) பிரதேச சபையின் உதயநகர் வட்டார வேட்பாளர்களை ஆதரித்து நேற்று முன்தினம் (15.04.2025) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசியற் களத்தின் உள்ளும் புறமும் எத்தனை பெரும் சவால்கள் எழுந்தாலும், இலக்கு நோக்கிய எம் பாதையும், பயணமும் அறம்சார்ந்ததாக அமையுமானால் அடையவேண்டிய அரசியல் உரித்துகளை அடைந்தே தீருவோம்.
தமிழினப் படுகொலை
தமிழினப் படுகொலைக்கான நீதியைக் கோரிப்பெற்று, எமது அரசியல் இலக்கை அடையும் வரை தொடர்ந்து போராட வேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ள நாம், காலச்சூழலும் - களச்சூழலும் தந்திருக்கும் தற்காலிக பின்னடைவுகளை காரணம்காட்டி நிரந்தர வெற்றியை இழக்கும் நிலைக்கு வந்துவிடக்கூடாது.
தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட வாலிபர் முன்னணித் தலைவரும், வேட்பாளருமான குணபாலசிங்கம் குணராஜ் தலைமையில் கட்சியின் மூத்த உறுப்பினரும், வேட்பாளருமான கணேசு துரைலிங்கம் உள்ளிட்ட உதயநகர் வட்டார வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற மேற்படி கூட்டத்தில்,
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளைச் செயலாளர் வீரவாகு விஜயகுமார், கரைச்சி பிரதேச சபையின் மேனாள் தவிசாளரும் வேட்பாளருமான அருணாசலம் வேழமாலிகிதன், வேட்பாளர்களான சாலினி சாருகன், இராசதுரை ஜெயசுதர்சன், யோகேஸ்வரன் நிரோயன் மற்றும் கட்சியின் வட்டாரக்கிளை உறுப்பினர் தர்மராசா சிறீதரன் ஆகியோர் உரையாற்றியிருந்ததுடன், வட்டாரக்கிளை உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





