சிறீதரனுக்கு நெருக்கடி :அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலக பணிப்பு!

M A Sumanthiran S. Sritharan ITAK
By Independent Writer Jan 03, 2026 02:40 PM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report
Courtesy: kapil

அரசியலமைப்பு பேரவையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் விலகவேண்டும் என்று பணிப்புரை வழங்குவதென இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பதில் செயலாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தாயகம் அலுவலகத்தில் இன்று(03) இடம்பெற்றது.இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…..

  மாகாணசபை தேர்தல் - அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்

அரசாங்கம் எல்லைமீள் நிர்ணயம் செய்தபின்னர் தான் மாகாணசபை தேர்தல் என்று கூறுவதை நாம் ஏற்கமுடியாது. தேர்தல் முறை மறுசீரமைப்பு என்பது ஒரு விடயம். ஆனால் மறுசீரமைப்பு செய்யப்படவில்லை என்பதற்காக தேர்தலே நடத்தாமல் இருப்பது ஏற்க முடியாத ஒரு விடயம். அதனை அரசுக்கு சொல்லியிருக்கிறோம்.

சிறீதரனுக்கு நெருக்கடி :அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலக பணிப்பு! | Siritharan Ordered Resign Constitutional Council

அப்படி பார்த்தால் கடந்த இரு நாடாளுமன்ற தேர்தல்களை நடாத்தியிருக்க முடியாது.எனவே தேர்தலை உரிய காலத்தில் நடாத்துவது அடிப்படையான விடயம். அரசானது தேர்தலுக்கு முகம் கொடுக்க பயந்துகொண்டு மாகாணசபை தேர்தலை காலவரையின்றி பிற்போட்டுக்கொண்டிருப்பதாக தெரிகின்றது.

முடிந்தால் மாகாணசபை தேர்தலை உடனடியாக நடாத்துங்கள் என்று பகிரங்கமாக சவால் விடுக்கின்றோம். வடகிழக்கில் அரசின் செல்வாக்கு பாரிய அளவு சரிவடைந்துள்ளது. மக்கள் தெளிவடைந்துள்ளனர். அதனை நடத்தினால் மண் கௌவுவீர்கள் என சவாலாக சொல்லிகொள்கிறோம்.

 பயங்கரவாத தடுப்பு சட்டம்

அத்துடன் பயங்கரவாத தடுப்புச்சட்டம் முற்றுமுழுதாக நீக்கப்படவேண்டும். மாற்றீடாக எந்த சட்டமும் தேவையில்லை என்று எங்களை விட தீவிரமாக இருந்தவர்கள் இந்த ஜேவிபியினர்.

சிறீதரனுக்கு நெருக்கடி :அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலக பணிப்பு! | Siritharan Ordered Resign Constitutional Council

கடந்தகாலங்களில் மாற்று வரைபுகள் வந்தபோது இவர்கள் அந்த கூட்டங்களுக்கே வரமாட்டார்கள். அதனை நீக்குமாறு நாங்கள் நடாத்திய போராட்டங்களில் ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் அவர்கள் சார்ந்த முக்கியமான ஒருவர் பங்கு கொண்டிருந்தார்.

எனவே ஆட்சிக்கு வந்தவுடன் இருப்பதை விட மோசமான ஒருவரைபு தற்போது வெளிவந்துள்ளது. பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்பதற்காகவாம் என்று கூறப்படுகின்றது.

இது ஒரு நகைப்பிற்குரிய விடயம். அவ்வாறு எனில் மக்களை பாதுகாப்பதற்காக இல்லை. இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் உள்ள விடயங்கள் தொடர்பாக கட்சி சில கலந்துரையாடல்களை நடாத்தும்.அந்த வரைபை முற்றாக எதிர்க்கிறோம்.

நல்லூர் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது ஒரு மோசமான குற்றச்சாட்டு. சட்டத்தின் முன் குற்றம் நிரூபிக்கப்படும் வரைக்கும் அவர் நிரபராதியாக இருந்தாலும் கூட ஒரு பொறுப்பான அரசியல் கட்சி என்ற ரீதியிலே இந்த செயற்பாட்டிற்கு இடம்கொடுக்க கூடாது. எனவே உடனடியாக அவரை கட்சியில் இருந்து நீக்குவது என்ற தீர்மானம் எடுத்திருக்கிறோம்.

சிறிநேசன் மீது குற்றச்சாட்டு

அத்துடன் எங்களுடைய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை தொடர்பாக பேசியிருக்கிறோம். குறிப்பாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அரியநேந்திரனை கட்சியின் நிகழ்வு ஒன்றில் முக்கியத்துவம் வழங்கியதான குற்றச்சாட்டு ஒன்று மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் மீது இருந்தது.

சிறீதரனுக்கு நெருக்கடி :அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலக பணிப்பு! | Siritharan Ordered Resign Constitutional Council

கட்சி தீர்மானத்திற்கு மாறாக செயற்பட்டமையால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவரே அரியநேந்திரன். அந்த தீர்மானத்துடன் இணைந்து செயற்படவேண்டியது கட்சியில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை.எனவே அவ்வாறு செயற்பட இடமளிக்க முடியாது என்ற விடயத்தையும் வலியுறுத்தியுள்ளோம்.

 சிறீதரன் பதவி விலக வேண்டும்

அத்துடன் தேசிய ரீதியில் ஒரு குற்றச்சாட்டு ஒன்று எமது நாடாளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் மீது முன்வைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவையில் அரசுடன் இணைந்து அனைத்திற்கும் வாக்களித்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.

சிறீதரனுக்கு நெருக்கடி :அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலக பணிப்பு! | Siritharan Ordered Resign Constitutional Council

விசேடமாக கணக்காளர் நாயகம் நியமனத்தில் ஒரு இராணுவ அதிகாரிக்கு சார்பாக வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இழப்பீட்டிற்கான அலுவலகத்திற்கும் இராணுவ அல்லது பாதுகாப்புத்தரப்பின் பின்புலத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு சிறிதரன் சார்பாக வாக்களித்தமை மட்டுமல்லாமல் அவர்களை தெரிவுசெய்கின்ற நேர்முக பரீட்சையிலும் தோற்றியுள்ளார் என்ற குற்றச்சாட்டுக்கள் இருந்தது. அதனை அவர் மறுத்திருந்தார். ஆனால் அது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அந்த இருவரையும் நியமிக்கக்கூடாது என்று கட்சி ஜனாதிபதிக்கு கடிதம் எழுத வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு எழுதிவைத்திருந்தோம். எனவே அது ஒரு தர்மசங்கடமான நிலைமையை கட்சிக்கு ஏற்படுத்தியுள்ளது. இவர்களை நியமிக்க கூடாது என்று கட்சி கடிதம் எழுதியுள்ளது. ஆனால் கட்சியை சேர்ந்தவர் அவர்களை தெரிவுசெய்துள்ளார்.

அத்துடன் அதற்கு முன்னரும் கூட இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நியமனம் தொடர்பாக மத்தியகுழு கூட்டத்தில் அவரிடம் விளக்கம் கேட்டிருந்தோம். கூடிய புள்ளி எண்ணிக்கையை பெற்றவருக்கு அந்த பதவியை வழங்காமல் இரண்டாவதாக வந்தவருக்கு அரசாங்கம் கொடுத்தபோது அரசுடன் இணைந்து அவர் வாக்களித்ததாக சொல்லப்பட்டது. அதற்கான நியாயப்பாடுகளை கட்சிக்கூட்டத்தில் அவர் சொல்லியிருந்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பதவி தொடர்பான வாக்கெடுப்பிலும் அப்படி செயற்பட்டதாக சொல்லப்பட்டிருந்தது. கணக்காளர் நாயகம் விடயத்தில் மூன்று தடவைகள் அவ்வாறு நடந்துள்ளது. இறுதியாகவே அந்த இராணுவ அதிகாரியும், அதற்கு முன்பு ஜனாதிபதி தனது நெருங்கிய நண்பரையும் பின்னர் இரண்டாம் நிலையில் இருக்கும் ஒருவரையும் பரிந்துரை செய்திருந்தார். இருப்பினும் அந்த மூன்றும் நிறைவேறவில்லை.

ஏனெனில் எதிர்கட்சி உறுப்பினர்கள் இருவரும் சிவில் சமூகத்தை சேர்ந்த மூவரும் சேர்ந்து அந்த பிரேரணைகளிற்கு எதிராக வாக்களித்திருந்தனர். அவர்களுக்கு சார்பாக சிறீதரனின் வாக்கு உட்பட நான்கு வாக்குகள் கிடைத்தது. எனவே அரசுடன் இணைந்து இந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்டது தொடர்பான குற்றச்சாட்டு அவருக்கு இருந்தது. ஏற்கனவே இது தொடர்பாக நாடாளுமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரச்சனையை எழுப்பியிருந்தார்.

சிறீதரன் பிரதிநிதித்துவப்படுத்துவது பிரதான எதிர்க்கட்சி தவிர்ந்த மற்றய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதி. எனவே அப்படியாக இருப்பவர் எல்லா விடயங்களிலும் கண்ணை மூடிக்கொண்டு அரசுக்கு சார்பாக வாக்களிப்பது தொடர்பான குற்றச்சாட்டு எட்டாவது தடவையாக நடந்துள்ளது. எனவே கட்சியையும் சங்கடப்படுத்தாமல் அவரையும் சங்கடத்திற்கு உட்படுத்தாமல் இருப்பதற்காக அரசியலமைப்பு பேரவையில் இருந்து அவர் விலகவேண்டும் என்று பணிப்புரை வழங்குவதாக தீர்மானம் எடுத்துள்ளோம் என்றார்.

அத்துடன் கட்சியின் ஒழுக்காற்று விடயங்கள் தொடர்பாக பிரதேச சபை உறுப்பினர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. கட்சியின் உத்தரவு மீறப்படும் சந்தர்ப்பத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது அவர்களுக்கு ஞாபகமூட்டப்பட்டிருக்கின்றது. 


சாரதி அனுமதிப்பத்திரம் ஆயுதமாக மாறியதா.... காவல்துறை மிரட்டல் : சிறீதரன் எம்.பி எச்சரிக்கை

சாரதி அனுமதிப்பத்திரம் ஆயுதமாக மாறியதா.... காவல்துறை மிரட்டல் : சிறீதரன் எம்.பி எச்சரிக்கை

தமிழர் தாயகங்களில் நிறுவப்படும் பௌத்த சின்னங்கள் : எழுந்துள்ள குற்றச்சாட்டு

தமிழர் தாயகங்களில் நிறுவப்படும் பௌத்த சின்னங்கள் : எழுந்துள்ள குற்றச்சாட்டு

you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பரந்தன் குமரபுரம், வட்டக்கச்சி

03 Jan, 2026
மரண அறிவித்தல்

இணுவில் தெற்கு, இணுவில், Scarborough, Canada

31 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், மாவிட்டபுரம், கிளிநொச்சி, Toronto, Canada

26 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Breda, Netherlands

04 Jan, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Zürich, Switzerland

02 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்

Kingston, United Kingdom, Wallington, United Kingdom

30 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

03 Jan, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France

03 Jan, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, ஸ்கந்தபுரம்

04 Jan, 2020
மரண அறிவித்தல்

சுருவில், டோட்மண்ட், Germany, Kierspe, Germany, Hildesheim, Germany

30 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Mülheim, Germany

05 Jan, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

03 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நவாலி கிழக்கு, Jaffna, Bielefeld, Germany

01 Jan, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், மல்லாவி

01 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Montreal, Canada

05 Jan, 2022
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

22 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உரும்பிராய், கொழும்பு, ஜேர்மனி, Germany

02 Jan, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

03 Jan, 1996
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வவுனிக்குளம், பேர்ண், Switzerland

06 Jan, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில், தமிழ்நாடு, India, பரிஸ், France, Neuss, Germany

06 Jan, 2023
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, மானிப்பாய், London, United Kingdom

31 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2016
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி கிழக்கு, East Gwillimbury, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025