சங்கீதன் விடுதலை : ஜனாதிபதி அநுர சிறீதரன் எம்.பிக்கு அளித்த முன்மொழிவு
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் சங்கீதனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவுடன் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்சிவஞானம் சிறிதரன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இந்த உரையாடலின்போது சங்கீதனுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்படாமையின் காரணமாக சாதாரண நீதிமன்ற முறைமையின் கீழ் அவருக்கான பிணைக்கோரிக்கையை சட்டத்தரணிகள் ஊடாக விடுக்க முடியும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சிறிதரன் எம்.பியிடம் தெரிவித்துள்ளார்.
சிறிதரன் அமைச்சர் சந்திரசேகர் உரையாடல்
இதனையடுத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, அமைச்சர் சந்திரசேகரருக்கும், சிறிதரன் எம்.பிக்கும் இடையில் நாடாளுமன்ற வளாகத்தில் உரையாடலொன்று நடைபெற்றுள்ளது.

அந்த உரையாடலின்போதும், ஜனாதிபதி அநுரவின் அறிவிப்பு தொடர்பில் அமைச்சர் சந்திரசேகர் வெளிப்படுத்தியதோடு சங்கீதனின் தாயாருடனும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மண்டைதீவு படுகொலை … கடலால் சூழப்பட்ட ஒரு தீவின் இரத்த நினைவுகள்... 10 மணி நேரம் முன்