முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரர் நீதிமன்றில் முன்னிலை!
Colombo
Wimal Weerawansa
Law and Order
FCID - Financial Crimes Investigation Division
By Sathangani
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்ச நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (28) காலை அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிணை தொடர்பான உத்தரவு ஒன்றுக்காக அவர் இவ்வாறு நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அண்மையில் கைது செய்யப்பட்டார்
அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் சரத் வீரவன்ச காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த 15ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி