அரசின் நோக்கம் இதுவே - பிள்ளையான் வெளியிட்டுள்ள தகவல்
சகல கிராமங்களிலும் உள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கு எதிர்வரும் புத்தாண்டிற்கிடையில் மின்சார வசதியினை பெற்றக்கொடுப்பதே அரசின் நோக்கமாகும்.
அதற்கு சகலரும் ஒன்றிணைந்து பணியாற்றி உள்ளுர் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் மூலம் அபிவிருத்தி அடைய முடியும் என மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான, பிள்ளையான் எனப்படும் எஸ்.சந்திரகாந்தன் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் தேசத்திற்கு வெளிச்சம் எனும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் இடம்பெற்ற கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது - இதுவரை தாம் மின்சார வசதியின்றி விச ஜந்துக்களின் அச்சத்திற்கு மத்தியில் தமது குழந்தைகள் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியாமல் இருந்ததாகவும்,
இன்று தமக்கு அதனை பெற்றுத்தந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு தமது நன்றியினை பயனாளிகள் தெரிவித்தனர்.