மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவசிதம்பரத்தின் நூற்றாண்டு தின நிகழ்வுகள்
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சிவசிதம்பரம் அவர்களின் நூற்றாண்டு பிறந்த தின நிகழ்வுகள் இன்று(20) காலை முன்னெடுக்கப்பட்டது.
சிவசிதம்பரம் அவர்களின் இல்லத்திலும், நெல்லியடியில் அமைந்துள்ள சிவசிதம்பரத்தின் சிலையடியிலும் பிறந்த தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது அவருடைய உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் உயர்கல்விக்கான புலமைப்பரிசில்களும் வழங்கப்பட்டன.
நாடாளுமன்ற துணை சபாநாயகர்

முருகேசு சிவசிதம்பரம் ஜுலை 20, 1923 தொடக்கம் ஜுன் 5, 2002 வரையான காலப்பகுதியில் சிறிலங்கா தமிழ் அரசியலில் நீண்டகாலம் செயற்பட்டதுடன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒரு வழக்கறிஞரும் ஆவார்.
1968 முதல் 1970 வரை நாடாளுமன்ற துணை சபாநாயகராகவும் பணியாற்றினார்.
இந்த நினைவேந்தலில் சிவசிதம்பரம் அவர்களின் குடும்பத்தினர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், சென்னை உச்ச நீதிமன்ற சட்டத்தரணி கோபிநாத் மற்றும் சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் மதிவாணன், பேராசிரியர் தேவராஜ் மற்றும் ஊர்மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
