நீராடச் சென்றவர்களுக்கு நேர்ந்த விபரீதம் - தொடர்ந்து மீட்க்கப்படும் சடலங்கள் - 6 பேர் பலி
தெதுறு ஓயா பகுதியில் நீராடச் சென்றவர்களில் காணாமல் போயிருந்த மேலும் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்படி, தெதுறு ஓயாவில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 6 ஆக உயர்ந்துள்ளது.
குறித்த சம்பவம் நிகவெரட்டிய - கொபெய்கனே தெதுறு ஓயா பகுதியில் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வைத்தியசாலையில் அனுமதி
மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, காணாமல் போன மேலும் இருவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இன்று நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
காணாமல் போனவர்களை தேடும் பணிகள் பிரதேச மக்களும் பாதுகாப்பு படையினரும் இணைந்து தீவிரமாக முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த ஒரு வார காலப்பகுதியில் நாடாளவிய ரீதியில் இடம்பெற்ற விபத்து சம்பவங்களில் 50இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்னர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |