வெடித்த தையிட்டி விகாரை சர்ச்சை..! தலைமறைவான தலைமைகள் - அலைக்கழிக்கும் அதிகாரிகள்

Jaffna National People's Power - NPP NPP Government
By Theepan Apr 17, 2026 08:23 AM GMT
Report

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்யும் பணிகள் விகாரதிபதியின் காவல் முறைப்பட்டினை அடுத்து கைவிடப்பட்டுள்ளது.

காணி அளவீட்டுக்கு இன்று எம்மை வருமாறு கூறி விட்டு கடற்தொழில் அமைச்சரோ, அவரின் பிரதிநிதிகளோ, தேசிய மக்கள் சக்தியினரோ யாரும் விகாரை பகுதிக்கு வரவில்லை என காணி உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளார்

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்களில் 17 பேரின் காணிகளை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அளவீடு செய்வது எனவும், அதற்கு காணி உரிமையாளர்கள் சம்மதிக்க வேண்டும் என கடந்த 11ஆம் திகதி கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகரர் மற்றும் மாவட்ட செயலர் ம. பிரதீபன் ஆகியோர் காணி உரிமையாளர்களிடம் கோரி இருந்தனர்.

தையிட்டி காணி விவகாரத்தில் பின்வாங்கிய கடற்றொழில் அமைச்சர்! காற்றில் பறந்த உறுதிமொழி

தையிட்டி காணி விவகாரத்தில் பின்வாங்கிய கடற்றொழில் அமைச்சர்! காற்றில் பறந்த உறுதிமொழி

காவல் நிலையத்தில் முறைப்பாடு

அதன் அடிப்படையில் இன்றைய தினம் காணி அளவீட்டு பணிகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் தையிட்டி விகாரை விகாராதிபதி ஜின்தோட்டை நந்தாராம தேரர் , விகாரை காணியினை சட்டவிரோதமாக அளவீடு செய்ய முயல்வதாக பலாலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

வெடித்த தையிட்டி விகாரை சர்ச்சை..! தலைமறைவான தலைமைகள் - அலைக்கழிக்கும் அதிகாரிகள் | Monk Complaint Surveying Thaiyiddy Land

அந்நிலையில் முன்னர் அறிவிக்கப்பட்டமைக்கு அமைவாக , காணி உரிமையாளர்கள் , மற்றும் நிலஅளவை திணைக்கள உத்தியோகஸ்தர்கள் விகாரை பகுதிக்கு காலை 09 மணிக்கு வருகை தந்திருந்தனர்.

இருந்த போதிலும் , காணிகளை அடையாளம் காட்ட வருமாறு காணி உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுத்த கடற்தொழில் அமைச்சர் , மாவட்ட செயலர் , தெல்லிப்பளை பிரதேச செயலர் உள்ளிட்ட எவரும் அவ்விடத்திற்கு காலை 9.30 மணி வரையில் வருகை தராத நிலையில் , விகாரை பகுதியில் பெருமளவான காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்தமையால் , காணி உரிமையாளர்கள் மத்தியில் குழப்பமான நிலைமை ஏற்பட்டு இருந்தது.

அந்நிலையில் காலை 10 மணியளவில் அவ்விடத்திற்கு வருகை தந்த மாவட்ட செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் , காணி அளவீடு செய்வதற்கு கொழும்பில் இருந்து விசேட குழு வருகை தர வேண்டும் எனவும் , அதனால் ஒரு மாத கால பகுதிக்குள் காணி அளவீட்டு பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக காணி உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் வருகைக்கு முன் ஈரான் போரை சாதகமாக்க முயற்சிக்கும் ட்ரம்ப்

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் வருகைக்கு முன் ஈரான் போரை சாதகமாக்க முயற்சிக்கும் ட்ரம்ப்

யாரும் விகாரை பகுதிக்கு வரவில்லை

தமக்கு குறுகிய கால அழைப்பில் ஒரு சனிக்கிழமை எம்மை அழைத்து காணி அளவீட்டு பணிகள் இன்றைய தினம் நடைபெறும் என கூறியவர்கள் , இன்று மீண்டும் ஒரு மாதத்திற்குள் அளவீடு செய்ய நடவடிக்கை என கூறுகிறார்கள்.

கடந்த பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் காணி அளவீடு செய்வது என பேசப்பட்டுள்ளது.அந்த கூட்டத்தில் பிக்குவும் கலந்து கொண்டிருந்தார். எம்மை அந்த கூட்டத்திற்கு அழைக்கவில்லை.

வெடித்த தையிட்டி விகாரை சர்ச்சை..! தலைமறைவான தலைமைகள் - அலைக்கழிக்கும் அதிகாரிகள் | Monk Complaint Surveying Thaiyiddy Land

இதுவரையில் கொழும்பில் நடைபெற்ற மூன்று கூட்டத்திற்கும் எம்மை அழைக்கவில்லை. அந்த கூட்டத்தில் என்ன பேசப்பட்டது , என்ன தீர்மானிக்கப்பட்டது என்பது தொடர்பில் எமக்கு எவரும் கூறவில்லை. அந்த கூட்ட அறிக்கைகள் கூட எமக்கு தரப்படவில்லை.

அவ்வாறான நிலையில் பிக்கு தனக்கு காணி அளவீடு செய்வது தொடர்பில் அறிவிக்கவில்லை என இன்று கூறி அளவீட்டு பணிகளை தடுத்து நிறுத்தியுள்ளார்.

ஆனால் மாவட்ட செயலர் , கொழும்பில் இருந்து விசேட குழு வர வேண்டும். அதன் பின்னரே காணிகளை அளவீடு செய்ய முடியும் என கூறி சென்றுள்ளார். இதுவரையில் காணி உரிமையாளர்கள் தான் விகாரை பிரச்சனையை தீர்க்க விரும்பவில்லை என கருத்து கூறி வந்தார்கள்.

நாம் இன்று காணிகளை அளவீடு செய்ய சம்மத்தித்த போதிலும் பிக்குவின் தலையீட்டால் காணி அளவீட்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. யார் பிரச்சனைக்குரியவர்கள் என தற்போது எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

காணி அளவீட்டுக்கு இன்று எம்மை வருமாறு கூறி விட்டு கடற்தொழில் அமைச்சரோ , அவரின் பிரதிநிதிகளோ , தேசிய மக்கள் சக்தியினரோ யாரும் விகாரை பகுதிக்கு வரவில்லை என காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர். 

சிறையில் உள்ள பிள்ளையான் - வெடித்த உண்ணாவிரதப் போராட்டம்

சிறையில் உள்ள பிள்ளையான் - வெடித்த உண்ணாவிரதப் போராட்டம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026