முட்டை என நினைத்து பந்துகளை விழுங்கிய மலைப்பாம்பு : வைரலாகும் காணொளி
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வீட்டிற்குள் இரவு நேரத்தில் 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று புகுந்தநிலையில் வீட்டில் இருந்த மூன்று கோல்ஃப் பந்துகளை முட்டை என்று தவறுதலாக நினைத்து ஒவ்வொன்றாக விழுங்கியுள்ளது.
இதைத்தொடர்ந்து பந்துகளை விழுங்கிய பாம்பு, அந்த இடத்தை விட்டு நகர முடியாமல் அங்கேயே கிடந்துள்ளது.
பாம்பை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற குடும்பத்தினர்
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அதனை மீட்டு அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள், பாம்பிற்கு மயக்க மருந்தினை செலுத்தி பந்துகளை அகற்ற முயன்றனர்.
அப்போது அவர்கள், பாம்பின் வயிற்றில் சிக்கியிருந்த மூன்று பந்துகளையும், ஒவ்வொன்றாக மெதுவாக வெளியே எடுத்தனர்.
மறக்க முடியாத நிகழ்வு
இந்த நிகழ்வு குறித்து மருத்துவமனை ஊழியர்கள் கூறுகையில், இது நிச்சயமாக ஒரு மறக்க முடியாத நிகழ்வு என்று குறிப்பிட்டனர்.
This snake ate a golf ball by mistake. They are taking it out of its throat. This should not be possible. @grok would the snake have survived without this? https://t.co/c8V2117r2M
— Saleem Speaks (@saleemspeaks2) September 21, 2026
இதையடுத்து பாம்பின் உடல்நிலை சீரானதிற்கு பிறகு, வனவிலங்கு மீட்புப் படையினர், அதனை பத்திரமாக காப்பகத்திற்கு கொண்டு சென்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |