அகற்றப்பட்ட திலீபனின் சிலை : சந்திரசேகருக்கு பதிலடி கொடுத்த சி.வி.கே
நல்லூரில் வைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் சிலையை அகற்றிய விடயத்தில் அரசாங்கத்திற்கு தொடர்பு இல்லை என்றால் தயவு செய்து எடுத்த சிலையை திருப்பி கொண்டு வந்து வைத்தால் பிரச்சினை முடிந்துவிடும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவாலயத்தில் காணப்பட்ட தியாக தீபத்தின் சிலை நேற்றைய தினம் (27) அகற்றப்பட்டமை குறித்து இன்று (27) அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பிலே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நானும் தமிழரசுக் கட்சியும் இந்த சிலை வைப்புக்கு எதிரானதாகவும், காவல்துறையினரின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் துணை போனதாகவும் அல்லது எங்களுடைய கோரிக்கையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்ததாகவும் ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் முன்வைத்துள்ளனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி சில காரியங்களை திட்டமிட்டு செய்திருக்கிறது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஊடவியலாளர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த சிலையை அகற்றவதற்கு, தமிழரசுக் கட்சியும் அதன் தலைமையும் ஒரு காரணம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |