மொட்டு கட்சியில் அதிபர் தேர்தல் களத்திற்கு தயார் நிலையில் ஆறுபேர்
Basil Rajapaksa
Mahinda Rajapaksa
Namal Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
Election
By Sumithiran
எதிர்வரும் அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்னிறுத்தப்படவுள்ள ஆறு பேர் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பசில் ராஜபக்சவுக்கு மேலதிகமாக, நாமல் ராஜபக்ச, தினேஷ் குணவர்தன, ஊடக நிறுவன உரிமையாளர் தம்மிக்க பெரேரா மற்றும் மற்றுமொரு விசேட நபர் ஆகியோரும் அதிபர் வேட்புமனுவை வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ளனர்.
உத்தியோகபூர்வமாக கலந்துரையாடவில்லை
எவ்வாறாயினும், அது தொடர்பில் கட்சி இதுவரை உத்தியோகபூர்வமாக கலந்துரையாடவில்லை என்பதுடன், அதிபர் தேர்தலை அறிவிக்கும் நேரத்தில் தீர்மானம் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இறுதி தீர்மானத்தை எடுக்கவுள்ள மகிந்த
கட்சியின் தலைவரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சவே இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்