ஈழத் தமிழர்களின் வலிகளை எடுத்துவரும் 'ஆறாம் நிலம்' - வெளியீட்டுக்கு தயார்
release
the sixth land
press show
By Vanan
ஈழத் தமிழர்களின் தொடர்ச்சியான வலிகளையும் துயரங்களையும் வெளிப்படுத்தும் முகமாக ஆறாம் நிலம் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஐபிசி தமிழின் முற்றுமுழுதான தயாரிப்பில், ஐபிசி தமிழ் நடாத்திய குறுந்திரைப்பட போட்டிகளில் வெற்றி பெற்ற இயக்குனர் ஆனந்த ரமணன் இயக்கும் முழுநீளத் திரைப்படம் எதிர்வரும் 23ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.
ஆறாம் நிலம் - இறுதி யுத்தத்தின் பின்னதாக இன்னமும் வாழ்வுக்காக போராடுவோரது கதையாக அமைந்திருக்கிறது.
இந்த திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு, பிரஸ் ஷோ (PRESS SHOW) நாளை (20) மாலை 3 மணியளவில் கமலா சினிமாவில் இடம்பெறக் காத்திருக்கிறது.
இந்தப் பிரஸ் ஷோ (PRESS SHOW) வில் அனைத்து ஊடகதாரர்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர் ஏற்பாட்டுக் குழுவினர்.
