போதைபொருள் குற்றச்சாட்டில் தொடர்ந்து கைதாகும் அரசியல் தலைமைகள்!
ஐக்கிய மக்கள் சக்தியின் கந்தேகெட்டிய பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் 86 கிலோகிராம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கஞ்சா கடத்தல் மோசடியில் உறுப்பினர் ஈடுபட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர் கைது செய்யப்படும் சந்தர்ப்பத்தில் விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த 86 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டது.
[DDMMINQ ]
போதை ஒழிப்பு திட்டம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் கீழ் அண்மையில் கொண்டுவரப்பட்ட “முழு நாடும் ஒன்றாக” போதை ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் மூலம் தொடர் கைதுகள் இடம்பெற்று வருகின்றன.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடீர் சோதனை நடவடிக்கைகளின் கீழ் இந்த கைதுகள் நடைபெற்று வருகின்றன.
இதில் அதிகளவில் அரசியலுடன் தொடர்புபட்டவர்கள் அதிகளவில் ]கைது செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 4 நாட்கள் முன்