வைத்தியர்களின் அடையாள பணிப்புறக்கணிப்புக்கு சஜித் தரப்பு ஆதரவு!
அரச வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்களால் இன்று (23.01.2026) மேற்கொள்ளப்பட்டு வரும் அடையாள பணிப்புறக்கணிப்புக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு ஆதரவு வழங்கியுள்ளது.
அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினரான வைத்தியர் சமல் சஞ்சீவ மூலம் குறித்த பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு வழங்குமாறு வைத்தியர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செயற்குழு உறுப்பினர்
இலவச சுகாதார சேவையை வழங்குவதற்கும் வைத்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் சுகாதார அமைச்சகம் ஒப்பந்தத்தை செயல்படுத்தத் தவறியமையே குறித்த பணிப்புறக்கணிப்புக்கு காரணம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டமானது இன்று (23.01.2026) காலை 8 மணி முதல் 48 மணிநேரம் வரை இடம்பெறும் என சங்கம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், மகப்பேற்று வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், சிறுநீரக வைத்தியசாலைகள் மற்றும் புற்றுநோய் வைத்தியசாலைகள் போன்றவை வழமைப் போல் இயங்கும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |