அவசரமாக ஒன்று கூடிய மொட்டுக் கட்சியின் பிரபலங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல் கட்சிக் கூட்டம் தற்போது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தலைமையில் அவரது கொழும்பு (Colombo) விஜேராம இல்லத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்திற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) உள்ளிட்ட கட்சியின் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மொட்டு கட்சி தனது பூர்வீக பகுதியிலேயே பாரிய தோல்வி அடைந்திருந்தது.
இது நாடாளுமன்ற தேர்தலிலும் தொடர்ந்த நிலையில் அடுத்த தேர்தலுக்கான வியூகத்தை அமைக்கும் முயற்சியில் மொட்டு கட்சி இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கூட்டம் மொட்டு கட்சியின் அரசியல் எதிர்காலத்திற்கான ஒரு புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
you may like this
