சனத் நிஷாந்த கொலை செய்யப்பட்டாரா...! ஜோன்ஸ்டன் சபையில் கேள்வி
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.
சனத் நிஷாந்தவின் மரணம் விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா எனும் சந்தேகம் தனக்கு எழுந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சந்தேகம்
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் கொலையா விபத்தா எனும் சந்தேகம் தற்போது பலர் மத்தியில் எழுந்துள்ளது.
இதே சந்தேகம் அவரது மனைவிக்கும் எழுந்துள்ளது. இதனாலேயே விசாரணைகளை கோரி அவர் மனுத்தாக்கல் செய்தார்.
விசாரணைகள்
அவர் உண்மையிலேயே திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
விசாரணைகளின் பின்னர், இந்த சம்பவம் கொலை என நிரூபிக்கப்பட்டால் இதனுடன் தொடர்புடையவர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |