புதிய தலைமையில் சிறிலங்கா அணி அறிவிப்பு
எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் மற்றும் ரி 20 போட்டிகளுக்கான அதிகாரபூர்வ இலங்கை அணி வீரர்களின் பெயர்களை சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஒருநாள், ரி 20 அணித்தலைவர்கள்
இதன்படி ரி 20 அணிக்கு வனிந்து ஹசரங்க அணித்தலைவராகவும் சரித் அசலங்க துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று ஒருநாள் அணிக்கு குசல் மென்டிஸ் தலைவராகவும் சரித் அசலங்க துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மீண்டும் மத்யூஸ்
சிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடருக்கான இலங்கை அணியில் ஏஞ்சலோ மத்யூஸ், பானுகா ராஜபக்ச மற்றும் பினுரா பெர்னாண்டோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிம்பாப்வே அணி ஜனவரி தொடக்கத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் ரி 20 தொடரில் விளையாட உள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் | 
                                        
                                                                                                                        
    
                                
    
    ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்