இலங்கைப் பெண்களை ஏமாற்றி பண மோசடி : நைஜீரிய பிரஜைகள் கைது

CID - Sri Lanka Police Sri Lanka Nigeria Social Media
By Sathangani Dec 30, 2023 05:49 AM GMT
Report

இலங்கைப் பெண்களை சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி ஏமாற்றி பணத்தை மோசடி செய்த வெளிநாட்டுப் பிரஜைகள் இருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் நைஜீரிய பிரஜைகள் என காவல்துறையினர்  தெரிவித்தனர்.

மேலும் இருவருக்கும் கடவுச்சீட்டு இல்லை எனவும், கடவுச்சீட்டுகள் நீதிமன்ற வசம் இருப்பதும் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பயணச்சீட்டு இன்றி பயணிப்பவர்களுக்கு விதிக்கப்படவுள்ள பாரிய அபராதம்

பயணச்சீட்டு இன்றி பயணிப்பவர்களுக்கு விதிக்கப்படவுள்ள பாரிய அபராதம்


குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகள் 

இந்த பண மோசடிகள் தொடர்பில் காவல்துறையினரிடம் 3 முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், 3 முறைப்பாடுகளும் பெண்களால் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைப் பெண்களை ஏமாற்றி பண மோசடி : நைஜீரிய பிரஜைகள் கைது | Nigerian Nationals Who Cheated Sri Lankan Women

19.01.2023 அன்று 1,045,000 ரூபாவும், 07.03.2023 அன்று 10,222,634 ரூபாயும், 06.07.2023 அன்று 18,531,676 ரூபாயும் மோசடி செய்யப்பட்டதாக குறித்த பெண்கள் முறையிட்டுள்ளனர்.

இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடகப் பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த சந்தேக நபர்களால் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்த இருவர், தன்னை வைத்தியர்கள் என கூறி அவர்களுடன் காதல் உறவில் ஈடுபட்டு பணத்தை மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கங்கள் தொடரும்: பேராசிரியர் எதிர்வுகூறல்

இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கங்கள் தொடரும்: பேராசிரியர் எதிர்வுகூறல்


சந்தேகநபர்கள் இருவர் கைது

மற்றைய பெண் ஒரு காரை வென்றதாகக் கூறி பணத்தை ஏமாற்றி, காரின் காசோலை மற்றும் பிற ஆவணங்களை அஞ்சல் சேவை மூலம் அனுப்பியுள்ளார்.


இது தொடர்பில் நீதிமன்றில் உண்மைகள் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வங்கிக் கணக்குகள் தொடர்பில் கிடைத்த தகவலை அடுத்து அளுத்கம பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிசிடிவி காட்சிகளின் படி, இருவர் அடையாளம் காணப்பட்டதுடன், அவர்கள் கைது செய்யப்பட்ட போது, ​​14 ஏடிஎம் அட்டைகள் மற்றும் 5 கையடக்கத் தொலைபேசிகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா சென்றவேளை நிகழ்ந்த அனர்த்தம் : கடலில் காணாமற்போன மாணவன்

சுற்றுலா சென்றவேளை நிகழ்ந்த அனர்த்தம் : கடலில் காணாமற்போன மாணவன்



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்