இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கங்கள் தொடரும்: பேராசிரியர் எதிர்வுகூறல்
இந்தியப் பெருங்கடலின் ஆழ்கடல் பகுதியில் மேலும் நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று (29) அதிகாலை இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் ஒன்று ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகவும், இரண்டாவது நிலநடுக்கம் 5.8 ஆகவும் பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆசிய - பசுபிக் பிராந்தியத்தில் சொத்துக்களின் பங்கீட்டில் சமத்துவமின்மை நிலவும் முதல் 5 நாடுகளின் பட்டியலில் இலங்கை
இலங்கைக்கு பாதிப்பு இல்லை
எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கங்களால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இது தொடர்பில் தேவையற்ற அச்சம் தேவையில்லை எனவும் பேராசிரியர் அதுல சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடலில் நேற்று காலை 8 மணியளவில் மாலைத்தீவுக்கு அருகில் இரு நிலநடுக்கள்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |