யாழில் 34 வருடங்களுக்கு பின் திறந்து வைக்கப்படும் வீதி
By Thulsi
யாழ்ப்பாணத்தில் (Jaffna) நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த விதியோன்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.
யாழ். வசாவிளான் மத்திய கல்லூரியூடாக அச்சுவேலி நோக்கி செல்லுகின்ற சுமார் 2 கிலோமீட்டர்கள் தூரம் கொண்ட வீதியே நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த நிலையில் திறந்து வைக்கப்படவுள்ளது.
மக்கள் பாவனை
இந்த வீதியை இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க திறந்து வைப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ முகாமுக்கு அருகாமையில் உள்ள குறித்த வீதியானது நீண்ட காலமாக மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில், வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடனான சந்திப்பின் போது குறித்த வீதியை நிறைந்து வைத்து, மக்களின் போக்குவரத்துக்கு வழி சமைக்குமாறு கோரிக்கையை முன்வைத்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
வடக்கு கிழக்கை பிரித்த நாள்… ராஜபக்சக்களை விஞ்சியவர்களா ஜேவிபி
2 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி