இலங்கையில் கொவிட் பலி 667 ஆக அதிகரிப்பு
sl-covid-death
By Vanan
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 667 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பொரலெஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் ஒருவரும், கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 85 வயதுடைய பெண் ஒருவரும், வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவரும், வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவரும், களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்