கோப் குழுவில் முன்னிலையாகவுள்ள கிரிக்கெட் சபை : குழுத் தலைவரால் விடுக்கப்பட்ட அழைப்பு
சிறிலங்கா கிரிக்கெட் சபையின் அதிகாரிகளை, கோப் எனப்படும் நாடாளுமன்ற பொது முயற்சியாண்மைக்கான நிலையியற் குழுவிடம் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்ஜித் பண்டாரவினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 14 ஆம் திகதி மதியம் 2 மணிக்கு கிரிக்கெட் சபையின் அதிகாரிகளை கோப் குழுவில் முன்னிலையாகுமாறு கோரப்பட்டுள்ளது.
விசாரணை
அண்மையில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணி தொடர்ச்சியாக தோல்வியடைந்து வந்தது.
இந்த நிலையில், கிரிக்கெட் சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி ஊழல், மோசடிகள் குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதற்காக கோப் குழுவில் முன்னிலையாகுமாறு கோரப்பட்டுள்ளது.
Sri Lanka Cricket has been summoned before the Committee on Public Enterprises (COPE) on Tuesday, 14th of Nov. at 2.00 p.m.#SLparliament #lka #SriLanka #9thParliamentLK
— Parliament of Sri Lanka (@ParliamentLK) November 10, 2023
இதேவேளை, சிறிலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.